'ஈஷா யோகா மையத்தில் இருக்கும் மகள்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என பட்டிமன்றம் வைக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகள்களை மீட்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ்- சத்திய ஜோதி தம்பதியின் மகள்கள் கீதா (34), லதா (31). இவர்களது தந்தை காமராஜ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மகள்கள் இரண்டு பேரும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக தனது மகள்கள் இரண்டு பேரையும் சிறை வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாயார் சத்திய ஜோதி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு எங்களது மகள்கள் அடிக்கடி சென்று வந்தனர்; இருவரும் அதிகம் படித்துள்ளனர். நாளடைவில் இருவரும் வீட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டு, ஈஷா மையத்தில் நிரந்தரமாக தங்கத் தொடங்கி விட்டனர். நானும், எனது கணவரும் எங்களது மகள்களை பார்க்கச் சென்றபோது, அங்குள்ளவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. தற்போது, இருவரும் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எங்களது மூத்த மகளின் பெயரை மமதி என்றும், இளைய மகளின் பெயரை மாமயூ என்றும் மாற்றிவிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும், ஆலந்துறை காவல் நிலையத்திலும் பலமுறை புகார் செய்தும் பயனில்லை. எங்களின் மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன், " இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு பெண்களின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு, அவர்களை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட முடியாது. எனவே, அந்த பெண்கள் ஈஷா மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா அல்லது அவர்களது விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளனரா என்பது குறித்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் சென்று, இரண்டு பெண்களையும் சந்தித்து விசாரணை நடத்த வேண்டும். அதன் விவரத்தை ஆகஸ்ட் 12 ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அப்போது, அந்த 2 பெண்களையும் அவர்களது பெற்றோர் சந்திக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கோவை புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்து தர வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு பெண்களிடமும் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈஷா யோகா மையத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் இருப்பதாக இரண்டு பேரும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், " 18 வயது நிரம்பியவர்களை சந்நியாசத்துக்கோ, குடும்ப வாழ்க்கைக்கோ செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது. மகள்கள் மனம் மாறினால் அழைத்துச் செல்லலாம். பெற்றோர் எத்தனை முறை வேண்டுமானாலும் மகள்களை பார்க்கலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. யாரும் தடுக்கவும் மாட்டார்கள். இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என பட்டிமன்றம் வைக்க முடியாது" என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும்," ஈஷா மையம் மீதான ஆக்கிரமிப்பு, சட்டவிரோத செயல் பற்றி தனியாக வழக்கு தொடருங்கள் "என்று நீதிபதிகள் பெற்றோருக்கு உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.