தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சபாநாயகர், சட்டப்பேரவை செயலாளர் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கடந்த 17ஆம் தேதி நானும், எங்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்டோம். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர், பொதுமக்களை சந்தித்து பேச நான் நடத்திய ‘நமக்குநாமே’ பயணம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு நான் தெரிவித்த பதில் கருத்தை சபாநாயகர், அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டார். ஆனால், ஆளும் கட்சி உறுப்பினர் தெரிவித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவில்லை. இதற்கு நானும், எங்கள் கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தினர். பின்னர் அவைக்கு வந்திருந்த தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, எங்கள் கட்சி உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதுவும் என்னை அவை காவலர்கள் ‘குண்டுக்கட்டாக’ தூக்கி வந்து வெளியில் விட்டனர். அவைக்கு வராத தி.மு.க. உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்து தீர்மானம் இயற்றியுள்ளனர்.
எங்களை சஸ்பெண்ட் செய்த இந்த உத்தரவு சட்டவிரோதமானது. எதிர்கட்சி உறுப்பினர்களை முக்கியமான விவாதங்களில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். சபாநாயகர் தன்னுடைய அதிகாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். சபாநாயகர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனால், அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும். எங்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை சட்டவிரோதமானது என்றும் அரசியலமைப்ப சட்டத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதுபோல, மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பி.டி.ஆர்.தியாகராஜன் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கடந்த 17ஆம் தேதி நான் சட்டப்பேரவைக்கு சென்றேன். சம்பவம் நடக்கும்போது நான் அவையில் இல்லை. சட்டப்பேரவையில் உள்ள நூலகத்தில் சில புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தேன். ஆனால், பிற தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவில், என் பெயரையும் சேர்த்து விட்டனர். எனவே என்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த 2 மனுக்களும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டி இருப்பதால் சபாநாயகர் உத்தரவுக்கு தற்போது இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.