உசேன் போல்ட், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற செய்தியை விடவும், இணையத்தில் வைரலாகப் போனது ஒரு போட்டோ.
ஒலிம்பிக் 100 மீ ஓட்டத்தில், உசேன் உட்பட எல்லா வீரர்களும் எல்லைக் கோட்டைப் பார்த்து சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டிருக்க, போல்ட் ஒரு விநாடிக்கும் குறைவான நொடியில், பின்னால் திரும்பி தனது போட்டியாளர்களைப் பார்த்து, வெற்றியை உணர்ந்து உதிர்த்த அந்தப் புன்னகை, இந்த ஒலிம்பிக்கின் அதிசிறந்த தருணங்களில் ஒன்றானது. இன்று வரை மீம்ஸ் மேல் மீம்ஸாக சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த மின்னல் தருணத்தை படம் பிடித்தவர், கெட்டி இமேஜஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் கேமரூன் ஸ்பென்சர்.
அந்த ஆச்சர்ய நொடிகளை தனது வார்த்தைகளில் விவரிக்கும் கேமரூன், "எனது தலைமை கேமராமேன், அந்த மைதானத்தில் மட்டும் சுமார் 600 புகைப்படக் கலைஞர்கள் இருப்பதாகச் சொன்னார். அத்தனை பேரின் லென்சும் உசேன் போல்ட்டை நோக்கித்தான் இருந்தது. எனது நிறுவனம் சார்பில் மட்டுமே மொத்தம் 11 கலைஞர்கள் அங்கு இருந்தனர். போட்டித் துவங்குவதற்கு முன்னரே சரியாக 70-வது மீட்டரில் நின்று கொண்டு, அவர் அந்த இடத்திற்கு வருவதற்காக காத்திருந்தேன். ஆனால் அவர் அங்கு வந்து ஒரு நொடி, திரும்பி, மெதுவாக சிரிப்பார் என யாருமே நினைக்கவில்லை. அதை என்னால் நம்பவே முடியவில்லை. போட்டியில் அவர் ஓடுவதை வைத்து சிறந்த புகைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால் அவரை போட்டோ எடுத்துவிட்டு எனது கேமராவைத் திரும்பி பார்க்கும் வரை அவர் என்னைப் பார்த்து சிரித்ததை கவனிக்கவே இல்லை. கேமராவைப் பார்க்கும் போதுதான் அதனை உணர்ந்தேன். நிஜமாகவே நான் அதிர்ஷ்டசாலி!
அவர் தனது போட்டியாளர்களைப் பார்த்துதான் சிரித்ததாக நினைக்கிறேன். ஆனால் என்ன? அவர் என் பக்கம் பார்த்து சிரித்துவிட்டார். போல்ட் அந்தப் புகைப்படத்தை பார்த்து விட்டதையும், அவருக்கு அது பிடித்திருந்ததையும் அறிந்தேன். மகிழ்ச்சி! நிஜமாகவே போல்ட் ஒரு ராக் ஸ்டார்தான். அவரை எப்போது போட்டோ எடுத்தாலும், அது அழகாகத்தான் இருக்கும். அவர் ஒரு நல்ல என்டர்டெயினர். மைதானத்தில் இருக்கும் ரசிகர்களை எப்போதும், என்டர்டெய்ன் செய்யவே விரும்புவார்" என்கிறார்.
ஸ்பென்சர், இதற்கு முன்னர் எடுத்த எத்தனையோ புகைப்படங்கள் வைரல் ஆகியிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. போல்ட்டின் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக்கிலும் ஸ்பென்சர் கலந்து கொண்டு போட்டோ எடுத்திருக்கிறார். ஸ்பென்சருக்கு இது 5-வது ஒலிம்பிக். போல்ட் ஓடுவதைப் படம் பிடிப்பதற்காக, Canon 1D X Mark II கேமரா, 70-200mm லென்ஸ், 135mm ஃபோகஸ், ஷட்டர் ஸ்பீட் 1/40th of a second என பக்காவாக ரெடியாகி, நின்றிருக்கிறார் ஸ்பென்சர்.
"ஒரு புகைப்படக் கலைஞராக நீங்கள், வித்தியாசமான முயற்சிகளை செய்யுங்கள். அந்தப் படத்தை பார்ப்பவர்களில், போட்டோகிராபி தெரிந்தவர்களுக்கு மட்டுமே, அந்தப் புகைப்படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தெரியும். ஆனால் உசேன் போல்ட்டைத் தெரிந்தவர்களுக்கு, அவரின் அழகான எக்ஸ்ப்ரஷன் மட்டுமே தெரியும்" என சிரிக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.