August 24, 2016
இரண்டாவது மாடியிலிருந்து கணவரால் தள்ளிவிடப்பட்ட மனைவி சாவு
கிழக்கு தில்லியில் உள்ள கல்யான்புரியில் கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கணவரால் தள்ளிவிடப்பட்ட மனைவி பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கிழக்கு தில்லியில் உள்ள கல்யாண்புரியில் கடந்த சில மாதங்களாக கணவரைப் பிரிந்து வசித்து வந்தவர் லலிதா (43). இவரது கணவர் திலிப் (49). இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மகள் பூஜா, மருமகன் சந்தோஷ் ஆகியோருடன் வசித்து வந்தார் லலிதா.
இந்நிலையில், சனிக்கிழமை லலிதாவின் வீட்டுக்கு அவரது கணவர் திலிப் சென்றார். இது குறித்து லலிதா கேட்ட போது, ஓய்வு எடுக்க வீட்டுக்கு வந்ததாக திலிப் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு லலிதா மறுப்புத் தெரிவித்துள்ளார். அப்போது லலிதாவின் மகள் பூஜாவும், மருமகன் சந்தோஷும் வீட்டில் இல்லை.
இதைத் தொடர்ந்து, பேரன் முன்னிலையில், லலிதாவும் திலிப்பும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது இறுதியில் மோதலாக உருவாகியது. அப்போது, லலிதாவை கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து திலிப் தள்ளிவிட்டுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்து சாலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து லலிதாவின் கணவர் திலிப்பை கைது செய்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இரண்டாவது மாடியிலிருந்து கணவரால் தள்ளிவிடப்பட்ட மனைவி சாவு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.