August 17, 2016
செல்பி எடுக்கும்போது கிணற்றில் தவறி விழுந்து மாணவர் பலி!
கோவை பீளமேடு பகுதியில் செல்பீ எடுக்கும்போது கிணற்றில் தவறி விழுந்து பலியான மாணவனின் உடல் 2 நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின் கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
கோவை தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஹரீஷ், தம்முடைய நண்பர்களுடன் பீளமேடு பகுதியில் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றின் மீது நின்றுக் கொண்டு செல்பீ எடுக்க முயன்றபோது, கால் இடறி ஹரீஷ் கிணற்றுக்குள் விழுந்து பலியானார்.
நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து உடலை மீட்க காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடியும் தோல்வியடைந்தனர். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியிலிருந்து கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் வரவழைக்கப்பட்டு இன்று காலை முதல் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நூறு அடி ஆழத்தில் இருந்த ஹரீஷின் உடல் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
செல்பி எடுக்கும்போது கிணற்றில் தவறி விழுந்து மாணவர் பலி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.