August 14, 2016
நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் இரங்கல்!
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.
நா.முத்துகுமார் இறந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என டிவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ள நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இது ஒரு மிகப் பெரிய இழப்பு என வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் திரைத்துறையின் இளம் பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், முத்துக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் டிவிட்டர் இணையதளம் வாயிலாக அவர் கூறியுள்ளார்.
நா.முத்துகுமாரின் இழப்பை நம்ப முடியவில்லை என கூறியுள்ள நடிகர் ஆர்யா, முத்துகுமாரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நா.முத்துக்குமாரின் பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ள பாடகர் கார்த்திக், அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது எனக் கூறியுள்ளார். நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு எனத் தெரிவித்துள்ள இயக்குநர் சுசீந்திரன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்
நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் இரங்கல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.