August 17, 2016
மீன்பிடித் தடை காலத்தை மாற்றியமைக்குமாறு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை!
மீன்பிடி தடைகாலத்தை மாற்றியமைக்க வேண்டுமெனவும், மீன்பதப்படுத்தும் கிடங்கு அமைத்துத் தர வேண்டுமெனவும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு, வேம்பார், தருவைகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மட்டும் 263 விசைப்படகுகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
பருவ நிலை மாற்றத்தால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருவதாகத் தெரிவித்துள்ள மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் தடை காலத்தை அரசு மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பதப்படுத்தும் கிடங்கு அமைத்து மீன்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
மீன்பிடித் தடை காலத்தை மாற்றியமைக்குமாறு அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.