August 9, 2016
பாமகவுக்கான "அரசியல் கட்சி" அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பாமகவுக்கான "அரசியல் கட்சி" அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியன் மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், மக்களிடையே சாதிரீதியான பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பாமகவின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கொள்கைக்கும், சமூகத்திற்கும் எதிராகச் செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம் என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை சட்ட ஆணையம் தான் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து, பெற்றுத் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். - ஒன் இந்தியா
அதே போல மதங்களை வைத்து அரசியல் செய்யம் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
நன்றி ராம நாதன்
பாமகவுக்கான "அரசியல் கட்சி" அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.