Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

விளையாடச் சென்ற குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த போதை ஆசாமிகள்!



சென்னை அம்பத்தூர் அருகே விளையாடச் சென்ற குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த போதை ஆசாமிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேனாம்பேடு வ.உ.சி நகரில் வசிக்கும் தனலெட்சுமியின் இரண்டரை வயது மகன் தானுவுக்கு செல்வம் மற்றும் பழனி ஆகியோர் மது ஊற்றி கொடுத்துள்ளார்.

இதனால், மயக்கத்துடன் வீட்டுக்கு வந்த குழந்தை தானுவை தனலெட்சுமி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

குழந்தைக்கு மது கொடுத்திருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை அடுத்து தனலெட்சுமி அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

இதுதொடர்பாக செல்வம், பழநி ஆகிய இருவரையும் கைது செய்த அம்பத்தூர் போலிசார் அம்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.