August 27, 2016
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் வழங்க சி.பி.ஐ எதிர்ப்பு!
ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதர்களுக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழும தலைவருமான கலாநிதி மாறன், அவரது மனைவியும், சன் டிடிஹெச் நிறுவன இயக்குநரான காவேரி மாறன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இந்த வழக்கில் இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று வழக்கு தொடுத்த சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்.எம் லிமிடெட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக கூறி, அமலாக்கப்பிரிவு சார்பில் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் வழங்க சி.பி.ஐ எதிர்ப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.