Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 7, 2016

வறுமை காரணமாக பச்சிளங்குழந்தையை விற்க முயன்ற தாய்!



திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்ற தாயை குழந்தையுடன் போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தையை பெற்ற இளம்பெண், அந்த குழந்தையை விற்க முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இளம்பெண்ணின் பிரசவ செலவுகளை அவருக்கு தொடர்பில்லாத ஒருவர் செலுத்தியதை கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு, போலீசாருடன் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், வறுமை காரணமாக குழந்தையை அப்பெண் விற்க முயன்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து தாய் மற்றும் குழந்தையை மீட்ட போலீசார் இருவரையும் திருப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.