Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 24, 2016

நெல்லையில் குடும்பதகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் குடும்பத்தினர்!



நெல்லையில் குடும்பதகராறின் காரணமாக அண்ணன் குடும்பத்தினர் தம்பியை  கம்பால் அடித்து கொலை செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் டவுண் அருகே சொக்கத்தான் தோப்பை சேர்ந்தவர் மாரியப்பனுக்கும் அவருடைய அண்ணன் வள்ளிநாயகம் என்பவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வள்ளிநாயகம், அவருடைய மருமகன் குமரேசன், மகள் ரேணுகா, மற்றும் 3 பேர் என 6 பேர் சேர்ந்து  மாரியப்பனை கம்பால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டு கிடந்த மாரியப்பனின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்த 6 பேர் மீது சுத்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.