August 10, 2016
நண்பர்களுடன் இணைந்து கணவனை கொடூரமாக கொன்ற மனைவி
மனைவியே நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35). இவரது மனைவி சாரதா (30). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், சாரதாவுக்கும் அதே பகுதியில் இருந்த ராம் என்ற சுந்தர்-க்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தவறான உறவுக்கு வித்திட்டது. சாரதாவிற்கும் சுந்தருக்கும் சக்திவேல் இடையூறாக இருப்பதாக கருதிய அவரது மனைவி சாரதா சக்திவேலை தீர்த்து கட்ட முடிவு செய்திருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு சுந்தர் மற்றும் அவரது நண்பரை கொண்டு வீட்டுக்குள் வைத்து சக்திவேலை அடித்து கொலை செய்துள்ளார். மேலும், சக்திவேல் உடலை அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தனது கணவரை காணவில்லை என்று சிங்காநல்லூர் போலீசாரிடம் சாரதா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. சாரதாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரின் 7 வயதான பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த சிறுமி, தந்தையை அம்மாவும், பக்கத்து வீட்டுக்காரரும் அடித்ததாக கூறியுள்ளார்.
பின்னர், சாரதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தங்களின் தவறான உறவிற்கு தனது கணவர் சக்திவேல் இடையூறாக இருந்ததால் சுந்தர் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணா என்பரோடு இணைந்து கணவரை அடித்து கொன்றேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, சாரதாவை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த ராம் என்ற சுந்தர் மற்றும் கிருஷ்ணாவையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நண்பர்களுடன் இணைந்து கணவனை கொடூரமாக கொன்ற மனைவி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.