August 28, 2016
மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேசத்தில் பேருந்து பயணத்தில் மனைவி இறந்ததால், பச்சிளம் குழந்தையுடன் இளைஞரை நடுக்காட்டில் இறக்கி விட்ட பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி. இவரின் மனைவிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரின் மனைவியை பேருந்தில் ராம் சிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அப்போது திடீரென அவரின் மனைவி பேருந்து பயணத்திலே உயிரிழந்தார். இத்தகவலை தெரிந்தவுடன் பேருந்து நடத்துனர் ராம் சிங்கை, பச்சிளம் குழந்தையுடனும், அவரின் மனைவியின் சடலத்துடனும் நடுக்காட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.
இவ்விவகாரம் அப்பகுதியில் காட்டுத்தீப் போல பரவியதை தொடர்ந்து, மனதாபிமானமற்ற முறையில் நடந்துக் கொண்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் மனைவியின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரம் வரை கணவர் தூக்கிச் சென்ற கணவன் விவகாரத்தால் எழுந்த சர்ச்சை முழுமையாக அடங்காத நிலையில், மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.