August 1, 2016
காதலிகளின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த இரு காதலர்களுக்கு தரும அடி உதை இருவரும் கவலைக்கிடம்
சகோதரிகளான காதலிகளின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த இரு இளைஞர்களை காதலிகளின் குடும்ப உறுப்பினர்கள் கடுமையாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இது பற்றி போலீசார் கூறும்பொழுது, மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மத்தனியா கிராமத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 2 சகோதரிகளை 2 இளைஞர்கள் தனித்தனியாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இளைஞர்கள் இருவரும் காதலிகளின் வீட்டினை சுற்றியிருந்த சுவரில் ஏறி குதித்து அவர்களது அறைக்குள் இன்று உள்ளே நுழைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரிகளின் தந்தை மற்றும் மூத்த சகோதரர் ஆகிய இருவரும் இளைஞர்களை கயிற்றினால் கட்டினர்.
அதன்பின் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்தனர். அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள் இருவரையும் அடித்துள்ளனர். இதில் இருவருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேஷ்பூர் அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களது நிலைமை மோசமடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சகோதரிகளின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டனர்.
Thanks To Daily Thanthi
காதலிகளின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த இரு காதலர்களுக்கு தரும அடி உதை இருவரும் கவலைக்கிடம்
Reviewed by மறத்தமிழன்
on
August 01, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.