Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

விருப்பத்திற்கு இணங்க மறுத்தப் பெண்ணை தீவைத்து எரித்த இளைஞர்!



உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஷாகரான்பூர் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள நுன்னாம்பாடி என்னும் கிராமத்தில் திருமான பெண் ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். 

அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்த இளைஞர் ஒருவர் அவர் வீட்டிற்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.  இளைஞரின் விருப்பத்துக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் அந்த பெண்ணின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த பெண்ணின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணின் உடல் முழுவதும் நெருப்பில் கருகியது.

இந்த சம்பவம் குறித்து அப்பெண்ணின் கணவர் கூறும்போது அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்த நினைத்து அவர் மீது தீ வைத்தவர் பெயர் Punnu என்றும் அவர் ஏற்கெனவே பல முறை அவரது மனைவியை கிண்டல் செய்துள்ளதாகவும் கூறினார். 

ஆனால் போலீசார் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடுமபத்தினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.