August 2, 2016
இளவரசன் மர்ம மரணம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
இளவரசன் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையைச் சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு மாற்றுவது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரியைச் சேர்ந்த இளவரசன், திவ்யா ஆகியோர் 2012ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், திவ்யாவின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஒரு பிரிவினர் நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கியதுடன் உடைமைகளைத் தீவைத்துக் கொளுத்தினர்.
2013ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின் உள்ள ரயில் பாதையில் இளவரசன் பிணமாகக் கிடந்தார். இளவரசனின் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கைச் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி அவருடைய தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளவரசன் தந்தை தரப்பு வழக்கறிஞர், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார். இது குறித்து செப்டம்பர் 9-ஆம் தேதி பதில் அளிப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றுவது தொடர்பாகவும், வழக்குத் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு செப்டம்பர் 9-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இளவரசன் மர்ம மரணம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.