August 20, 2016
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு!
பருவமழை பொய்த்ததால் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பருவமழை பொய்த்துள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. அணைகளின் நீர் இருப்பு 48 சதவிகிதம் வரை குறைந்திருப்பதால் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்தால் அதனை சந்திக்க கர்நாடகம் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.