Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 30, 2016

ஓடாத பேருந்துகளுக்கு தக்கல் முன்பதிவு திட்டம் ?



ஓடாத பேருந்துகளுக்கு தக்கல் முன்பதிவு திட்டம் ?
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50% சதவீதத்துக்கும் மேலானவை, இயங்குவதற்கு தரமற்றதாக இருக்கும் நிலையில், நெடுந்தூரப் பேருந்துகளில் பயணம் செய்ய, தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அத்துறையின் அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், 2016-17ம் ஆண்டு போக்குவரத்து துறை புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது, திருச்சி, மதுரை,  சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசு பேருந்துகளில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக நெடுந்தூரப் பேருந்துகளுக்கு செல்லிடப்பேசி தனி செயலி மூலம் முன்பதிவு செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இந்நிலையில், போக்குவரத்துக்கழக தொழலாளர்கள் சிலர் கூறுகையில், “தமிழகத்தில் அரசு பேருந்துகளில் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சில பேருந்துகளை இயக்கவே முடியாது என்று நிர்வாகத்துக்கு தெரிவித்தாலும், கட்டாயப்படுத்தி இயக்கச்செல்கின்றனர். இந்நிலையில், தக்கல் முறையில் முன்பதிவு செய்தால், அதிக கட்டணம் வசூலிக்க நேரலாம்.ஆனால், பேருந்துகள் அந்த அளவுக்கு தரம் உள்ளதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.”என்றனர்,

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.