August 20, 2016
குஜராத் மாநிலம் உனாவில் தலித்கள் மீது மீண்டும் தாக்குதல்
குஜராத் மாநிலம் உனாவில் மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய தலித்களை மற்றொரு பிரிவினர் வழிமறித்துத் தாக்கியதில் 8பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் தலித்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனாவில் நேற்று மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், குஜராத்தில் தாக்குதலுக்குள்ளான தலித் இளைஞரின் தந்தை பாலு சர்வையா, திரைப்படத் தயாரிப்பாளர் ஆனந்த் பட்டவர்த்தன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தலித்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மாநாடு முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்த 20 பேரை சம்தேர் என்னுமிடத்தில் மற்றொரு பிரிவினர் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் பாவ்நகர், ரஜுலா நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தலித்களைத் தாக்கிய வழக்கில் சம்தேரைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் உனாவில் தலித்கள் மீது மீண்டும் தாக்குதல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.