Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 30, 2016

சிறைச்சாலைக்கு பயந்து போலிமருத்துவர் தப்பி ஓட்டம்



காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவக் குழு விசாரணைக்கு பின்னர் போலி மருத்துவர் என்று
 தெரியவந்த நபரை காவல்துறையிடம் ஒப்படைக்க சென்றபோது அவர் தப்பிச் சென்றார்.
சித்ரவாடி மற்றும் ஓஏமங்கலம் கிராமப்பகுதிகளில் மருத்துவக் கல்வி பயிலாமல், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் பிடிபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தை அடுத்த ஓஏ மங்கலம் மற்றும் சித்தாமூர் அடுத்த சித்ரவாடி ஆகிய கிராமப்பகுதியில், மருத்துவக் கல்வி பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவத்துறைக்கு புகார் சென்றது. இதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்டம் பொது மருத்துவத்துறை இணை இயக்குநர் விஜயகுமார் உத்தரவின் பேரில், மருத்துவக் குழுவினர் கிராமப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
அப்போது, சுங்குவார்சத்திரம் அடுத்த ஓஏ மங்கலம் பகுதியில் தனியார் குடியிருப்பில் கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்த சாரதி என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில், மருத்துவக் கல்வி பயிலாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, சுங்குவார் சத்திரம் காவலர்களிடம் போலி மருத்துவரை ஒப்படைத்தனர். போலி
 மருத்துவரை, மருத்துவத்துறையினர் காவலர்களிடம் ஒப்படைத்த போது அவரிடம் சிகிச்சை பெற வந்திருந்த கிராம மக்கள், அவரை கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு
 தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் கிராம மக்களை சமாதானம் செய்தனர்.
இதேபோல், மற்றொரு மருத்துவக் குழுவினர் சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்ரவாடி கிராமத்தில் மருத்துவக் கல்வி பயிலாமல் சிகிச்சை அளித்து வந்த விஜயகுமார் என்பவரிடம் விசாரணை நடத்திய பின்னர் சித்தாமூரில் காவல்துறையில் ஒப்படைக்க அழைத்துச் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட பொதுமருத்துவத்துறை இணை இயக்குநர் விஜயகுமார் கூறுகையில், கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான கல்வியை பயின்றுள்ளனரா? என அறிந்துகொள்ளவேண்டும். மருத்துவம் பயிலாத ஒருவர் பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருவதால் அவரை முழுமையாக நம்புகின்றனர். மருத்துவக் கல்வி பயிலாமல் சிகிச்சை அளிக்கும் நபர்களிடம், கிராம மக்கள் சிகிச்சை பெறக்கூடாது.இதனால் பலவிதமான ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.