August 23, 2016
ஜெய்ஷா விவகாரம்... தூக்கு போட்டு தொங்கலாம்... தேசியவாத காங்கிரஸ் காட்டம்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மராத்தான் போட்டியில் பங்கேற்ற ஜெய்ஷாவிற்கு முறையாக பானம் எதுவும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நாம் அனைவரும் தூக்கு போட்டு தொங்கலாம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் மஜித் மேனன் காட்டமாக பேசியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜயகோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கோரியுள்ளது.
ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி முடிவடைந்தது. இதில், 42 கிலோ மீட்டர் மகளிர் மாரத்தான் ஒட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில், ஜெய்ஷா பங்கேற்றார். போட்டியின் போது இவருக்கு போதிய தண்ணீர், குளுகோஸ் உள்ளிட்ட பானங்கள் இந்திய அரசால் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் மஜித் மேனன் 'இது வெட்கக்கேடான விஷயம், உலக அளவிலான போட்டியில் பங்கேற்ற ஜெய்ஷாவிற்கு இப்படி நடந்ததற்கு நாம் எல்லோரும் தூக்கு போட்டு தொங்கலாம். குடிக்க தண்ணீர் கூட கொடுக்காத நமக்கு விளையாட்டு வீர்ர்கள் தங்கம் கொண்டு வர வேண்டுமா? இந்த பொறுப்பற்றத்தனத்திற்கு பொறுப்பேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று காட்டமாக பேசியுள்ளார்.
ஜெய்ஷா விவகாரம்... தூக்கு போட்டு தொங்கலாம்... தேசியவாத காங்கிரஸ் காட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.