Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் நடந்த கூட்டு வன்புணர்வு: கல்வி நிறுவனத்தால் மறைக்கப்படுகிறதா?


ஒடிசா மாநிலம், புவனேஷ்வரின் National Institute of Fashion Technology இல் படிக்கும் மாணவி ஒருவர், நேற்று ரயில் நிலையத்திலிருந்து கல்லூரி நோக்கி வந்துகொண்டிருக்கும் வழியில், கல்லூரியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் 3 அல்லது 4 நபர்களால் வன்புணர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து போராடிய மாணவர்களின் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், அங்குள்ள தனியார் தொலைக்காட்சியிடம், கல்லூரியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் 3 அல்லது 4 நபர்களால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பெண் சத்தமாக குரலெழுப்பியும் காவலாளிகளால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தரப்பில், அத்தகைய வன்புணர்வு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று மறுக்கப்படுகிறது. NIFT அமைந்திருக்கும் KIT தொழில்நுட்ப நிர்வாகம், அந்தப் பெண் தங்கள் மாணவியே இல்லை என்றும், அவர் NIFT வளாகத்தில் நடந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால், போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், வன்புணர்வுக்குள்ளான பெண், உண்மையைக் கூற விரும்புவதாகவும், ஆனால் அவர் பேச அனுமதிக்கப்படாமல் மிரட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். NIFT நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் வராமல் இருப்பதற்கான முயற்சியென்றும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.