Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்!



கோவில்பட்டியில் பணத்துக்காகத் தந்தையை அடித்துக்கொன்ற மகனைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமியிடம் கல்லூரியில் படித்து வரும் அவரது மகன் தீபக் சாம்ராஜ், அடிக்கடி பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுச் சின்னச்சாமியின் மனைவி எஸ்தர் விளாத்திக்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரவில் வீட்டில் இருந்த தந்தையிடம் பணம் கேட்டுத் தீபக் சாம்ராஜ் தகராறு செய்துள்ளார்.

தகராறு முற்றவே தந்தையின் தலை மீது அம்மிக் குழவியைப் போட்டுத் தாக்கியதுடன் அவரைக் கைகால்களைக் கட்டிப்போட்டுக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் தப்பியோடிவிட்டார்.

வெளியூர் சென்றிருந்த எஸ்தர் இன்று காலை வீடு திரும்பியதும், சின்னச்சாமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த காவல்துறையினர் சின்னச்சாமியின் உடலைக் கைப்பற்றி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய தீபக் சாம்ராஜைக் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் கைது செய்த காவல்துறையினர் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தக்காகத் தந்தையை மகனே அடித்துக் கொன்றது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.