Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 2, 2016

ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கு: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை



ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் மாறன் .
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டி, அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாக புகார் எழுந்தது.
இந்தப் பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி, தயாநிதி மாறன் ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாறன் சகோதரர்களின் முன்ஜாமின் மனுக்கள் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.