August 8, 2016
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வலியுறுத்தி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி சண்முகாநகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடிப் பொங்கல் விழா நிறைவு நாளான இன்று இரவு கோவில் சார்பில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக நிகழ்ச்சி நடத்த வரும் கலைஞர்களுக்கு அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடந்த பொதுமக்கள் கோவில்பட்டியில் இருந்து கடலையூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறை ஆய்வாளர் பவுல்ராஜ் மறியலில் ஈடுபட்டிருந்த பக்தர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தினார்.
அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.