August 4, 2016
விருதுநகர் காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு கத்தி-குத்து
விருதுநகர் அருகே கஞ்சா வியாபரியை பிடிக்க முயன்ற போது, கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீராச்சாமி இன்று காலை ஆத்திப்பட்டி திம்மம்மாள் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த நபரை சோதனை செய்த போது, வாகனத்தில் கஞ்சா பதுக்கி இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்நபரை பிடிக்க முயன்ற போது சார்பு ஆய்வாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமுற்ற விராச்சாமியை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இதனிடையே தாக்குதல் நிகழ்ந்த சம்பவ இடத்திலிருந்து கஞ்சா பொட்டலங்கள் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை அருப்புக்கோட்டை தாலுக்கா போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு கத்தி-குத்து
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.