August 16, 2016
ஜல்லிக்கட்டு குறித்து மேனகா காந்தியின் கருத்தில் உடன்பாடில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்!
ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்த கருத்தில் உடன்பாடில்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை வைத்து, அரசியல் செய்யப்படுவதாக, மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும் ஜல்லிக்கட்டு மிகவும் ஆபத்தான் விளையாட்டு என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேனகாகாந்தியின் கருத்தில் தமக்கு உடன்பாடில்லை என்றார்.
கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகள் கூட ஆபத்தானவை என்று கூறிய அவர், யார் எந்த கருத்தினை தெரிவித்தாலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழா அன்று நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு குறித்து மேனகா காந்தியின் கருத்தில் உடன்பாடில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்!
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.