August 20, 2016
நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலைமிரட்டல் விடுத்த முறுக்குவியாபாரி கைது!
தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு கொலைமிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தளவாய்பட்டிணத்தை சேர்ந்த முறுக்குவியாபாரி மனோகர் மீதான குற்றவழக்கில் வழக்கறிஞரை நியமனம் செய்யாமல் அவரே ஆஜராகிவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கிற்காக தாராபுரம் நீதிமன்றத்திற்கு வந்த மனோகர், அப்போது தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொள்ளாத்தால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நீதிபதி சசிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மனோகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலைமிரட்டல் விடுத்த முறுக்குவியாபாரி கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.