Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் தற்கொலை முயற்சி




தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி புதுகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 19).இவர் கடந்த 11-ந் தேதி சீர்காழி கடை வீதியில் உள்ள ஒரு கடையில் 4 செல் போன்களை திருடியதற்காக திருவெண்காடு போலீசார் கைது செய்து சீர்காழி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி மணிகண்டனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டார்.
அதனால் வெள்ளியன்று காலை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு மணிகண்டன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வழக்கம் போல் சிறுவர்களை காலையில் திறந்து விட்டு மாலையில் சிறைகளில் அடைக்கும் போது மணிகண்டனை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசார் மணிகண்டனை தேடியபோது சிறுவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் உள்ள ஜன்னலில் மணிகண்டன் கயிற்றில் தூக்கிட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டனர். பின்பு மணிகண்டனை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மணிகண்டன் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.