Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

இலங்கையில் இருந்து சென்ற இஸ்ரேல் பெண்ணின் குழந்தை யாருடையது..!!



இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும்.
சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தபோது நாகாஷ் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வர்த்தகப் பயணத்தின்போது அவர் இலங்கையில் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், ஆனால் குழந்தைக்காக அவர் அளித்த விசா விண்ணப்பம் மறுக்கப்பட்டதாகவும் நாகாஷ் தெரிவித்திருக்கிறார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.