Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 23, 2016

வாழக்கையில் செக்ஸின் முக்கியத்துவம்!



மகிழ்ச்சியான வாழ்விற்கு செக்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வேலை பளுவினாலும், மன அழுத்தத்தினாலும் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு செக்ஸ் முக்கிய வடிகாலாக இருக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும் மன உளைச்சலினால் மன அழுத்தத்தை பெற வேண்டிய அவசியமில்லை என்றும், தங்களது இணையுடன் நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சியான வாழ்வை பெற இயலும் என்றும் உலகலாவிய ஆய்வு தெரிவிக்கிறது.


சமீபத்திய ஆய்வில் திருமணமானவர்கள் அல்லது காதலிப்பவர்கள் அதிக அளவில் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்றால் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்று ஆய்வறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு முறை செக்ஸ் வைத்துக்கொள்பவர்களைவிட நான்கு அல்லது அல்லது அதிகமான முறை உடலுறவு வைத்துக்கொள்பவர்கள் ஒப்பீட்டு அளவில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2,400 திருமணமானவர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தொடர்ச்சியாக செக்ஸ் வைத்துக்கொள்வதால் நெருக்கம் அதிகரிக்கிறது என்றும் சந்தோஷமாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்த சந்தோஷத்திற்கு உடலுறவு என்பது முக்கிய காரணி என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி செக்ஸ் சந்தோஷத்தை மேம்படுத்தும், சந்தோஷம் செக்ஸை மேம்படுத்தும் என்பதே ஆகும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.