August 23, 2016
அதிமுகவில் விழுந்த இன்னொரு விக்கெட்
கடந்த மே மாதம் தேர்தல் முடிவடைந்து மீண்டும் ஆட்சி பொறுப்பை அதிமுக ஏற்றதில் இருந்தே அக்கட்சியின் விக்கெட்டுக்கள் அவ்வப்போது விழுந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று முக்கிய விக்கெட் ஒன்று விழுந்துள்ளது. அதாவது அதிமுக அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாள் இன்று அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு ஒன்றை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா சற்று முன்னர் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பா.நாராயண பெருமாள் நீக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் தான் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அதிமுகவில் விழுந்த இன்னொரு விக்கெட்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.