August 10, 2016
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு உத்தரவு!
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் ஆகஸ்ட் 16ஆம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும், 2014ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை மாநாட்டிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. விசாரணைக்காக நேற்று விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி ஆகிய மூவரும் ஆஜராகவில்லை. வெங்கடேசன் மட்டுமே ஆஜரானார். அப்போது விஜயகாந்த் ,பிரேமலதா, பார்த்தசாரதி ஆகியோருக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி வரும் 16ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு உத்தரவு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.