Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 9, 2016

பார்வையற்ற பெண்ணை ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்



பார்வையற்ற பெண்ணை ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்
உத்தரபிரதேசத்தில் பார்வையற்ற பெண்ணை ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் மதுரா மாவட்டத்தில் உள்ள  ராம் நக்லா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சவுத்ரி (35), ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அதேபகுதியில்  18 வயது பார்வையற்ற பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
ஞாயிறன்று இரவு பார்வையற்ற வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அஜித் சவுத்ரி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து காலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரை ஏற்று காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயக்கம் காட்டியதாக பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் அருண் சிங் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.