August 24, 2016
இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் கருத்தால் பரபரப்பு
இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மீண்டும் வலியுறுத்தி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இந்து மதத்தை சேர்ந்த இளம் தம்பதிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிப்பதாக கூறிய அவர், பிற மதத்தினரை போல் அதிக குழந்தைகளை பெற்று இந்து மதத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள எந்த சட்டமும் தடுக்கவில்லை என்று பகவத் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. பின்னர் பேசிய ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் தர்பன், "நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் செழிக்கச் செய்ய நாம் நமது சந்ததிகளை பெருக்க வேண்டும். இதைத் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியிருக்கிறார்.
உதாரணத்துக்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொள்வோம், "பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 1.8% பேர் மட்டுமே ஆனால் அங்கு மற்ற சமூகத்தினரின் அளவு 8.1% ஆக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் பிரான்ஸ் நாட்டில் அடுத்த 25 ஆண்டுகளில் வெளியில் இருந்து குடியேறியவர்கள் மட்டுமே இருப்பர்.
இதேபோல் ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் முஸ்லிம்களே அதிகம் இருக்கின்றனர். எனவே, இந்து தம்பதிகளே.. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வீர்" என்றார்.
பதில் இல்லை:
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு எப்படி உணவளிப்பது என கேட்டார். ஆனால், அக்கேள்விக்கு பதிலளிக்கப்படவில்லை.
யூடியூப் வீடியோ:
நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேட்டபோது அந்த வீடியோ யூடியூபில் இருந்து திரட்டபட்டது என தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. மோகன் பகவத்தின் யோசனை படி நடந்தால் நாட்டில் பசி, பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து அரசுக்கு பெரிய நெருக்கடி ஏற்படும் என்று அந்த கட்சி எச்சரித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள உத்திரபிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்துக்களின் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் முக்கிய கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளதால் இந்துக்களின் வாக்குகளை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் கருத்தால் பரபரப்பு
Reviewed by மறத்தமிழன்
on
August 24, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.