Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 2, 2016

புகார் அளிக்க வந்தவரை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி



உத்தர பிரதேசத்தில் மோகன்லால்கஞ்ச் காவல் நிலையத்திற்குள் வைத்து துணை ஆய்வாளர் ராம் யக்ய யாதவிற்கு ஒரு நபர் காலில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் அளிக்க வந்த நபர் துணை ஆய்வாளர் ராமிற்கு காலில் மசாஜ் செய்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து ராம் யக்ய யாதவினை,  மாவட்ட எஸ்பி மஞ்சில் சைனி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி 2 வாரங்களில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.