Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்.. ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்!



தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ததகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பேரவையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கிளம்பிப்போனதும், விவாதங்கள் தொடர்ந்தன.
திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.வான குணசேகரன் தன் பேச்சின் போது, "நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.
அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் நீண்ட நேரமாக குரல் கொடுக்க... அவர்களை அவையை விட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒருவாரம் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை இன்று இத்தோடு ஒத்திவைக்கப்பட்டது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.