Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

ஏரியில் நிர்வாண குளியலில் ஈடுபட்டவருக்கு "அது" போன கதை


ஜெர்மனியில்  பாவரியன் ஏரியில் குறிப்பிட்ட பகுதியில் நிர்வாணக்குளியலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு ஆண்கள் நிர்வாண குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெயர் வெளிப்படுத்தாத அந்த நபர் குறிப்பிட்ட பகுதியில் நீச்சலிட்டு குளித்து வந்துள்ளார். திடீரென்று அவரது உறுப்பில் எதுவோ கவ்வியது போன்ற உணர்வு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து சுற்றும் பார்வையிட்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அருகாமையில் ஒருபக்கம் மீனவர் ஒருவர் தூண்டிலிட்டு மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து அந்த மீனவருக்கு எச்சரிக்கை செய்துவிட்டு அவர் இருக்கும் திசை நோக்கி இவர் நீச்சலிட்டு சென்றுள்ளார். கரை சேர்ந்த அவருக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது மர்ம உறுப்பில் சிக்கிய தூண்டிலை அவரால் அகற்ற முடியாமல் போனது. இதனையடுத்து அந்த மீனவர் தனது கத்தியால் தூண்டிலின் ஒருபகுதியில் கட்டப்பட்டிருந்த இழையை துண்டித்தார்.

பின்னர் அந்த நபரை தனது மிதிவண்டியில் அமர்த்தி அவரது வீட்டிற்கு கொண்டு சேர்த்தார். வீட்டில் சேர்ந்ததுதான் தாமதம் உடனடியாக அந்த நபர் தமது காரை கிளப்பிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

மருத்துவமனையில் வைத்து அந்த தூண்டிலை அகற்றியதுடன் காயங்களுக்கும் கட்டுப்போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த நபருக்கு அடுத்த ஒரு வார காலம் நீச்சலிட மட்டுமல்ல குளிக்கவே தடை விதித்துள்ளார் மருத்துவர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.