Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

நெல்லை அருகே கொலை செய்தவரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!



நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே விவசாயியை அடித்து கொலை செய்தவரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகைய்யா பாண்டியனை நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.

இதனிடையே ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, மூவிருந்தாளி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் விலக்கி கொள்ளப்பட்டதுடன், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு காவலர் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  சண்முகையாவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர், ராமரின் வீட்டை அடித்து நொறுக்கி, வீட்டிற்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்ககூடும் என கூறப்படுகிறது.

கொலையாளியின் வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் தொடர்பாக, தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இக்கிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால் கிராமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.