August 1, 2016
பிரபல நடிகையின் அந்தரங்கங்களை கசியவிட்ட நபருக்கு எச்சரிக்கை
பிரபல நடிகை ஒருவரின் தொலைபேசி அழைப்புக்களை இரகசியமாக ஒட்டுக் கேட்ட வர்த்தகர் ஒருவருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல சிங்கள நடிகை மேனகா மதுவந்தி என்ற இளம் நடிகையின் தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்டதாகவும் குறுஞ்செய்திகளை பார்வையிட்டதாகவும் வர்த்தகர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
26 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னதாக மேனகாவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட குறித்த இளைஞரிடம், செல்லிடப் பேசியில் இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரியுள்ளார்.
இதன் போது குறித்த இளைஞர் மேனகாவிற்கு வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை தமது செல்லிடப் பேசி ஊடாக கேட்கவும் பார்வையிடவும் கூடிய வகையில் மென்பொருள் ஒன்றை செயற்படுத்தியுள்ளார்.
மேனகாவின் இணைய முகவரிற்குள் பிரவேசித்து புகைப்படங்களை வேறு நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தாம் நெருக்கடியை எதிர்நோக்கியதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை மீளவும் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்குமாறும் மேனகா பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
இதன் அடிப்படையில் கொஹூவல பொலிஸார், குறித்த வர்த்தகரை அழைத்து அண்மையில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
பிரபல நடிகையின் அந்தரங்கங்களை கசியவிட்ட நபருக்கு எச்சரிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.