Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 25, 2016

நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்... ஃபேஸ்புக்கில் படம் போட்டு குதூகலம்



தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அரசியல் தலைவராக இல்லாமல் ஒரு குடும்பத்தலைவராக விஜயகாந்த் தனது பிறந்தநாளினை மனைவி, மகன்கள் சகிதம் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த படம் முகநூல் பக்கத்தில் வலம் வருகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு விஜயகாந்த் தனது பிறந்த நாளை 'பசுமை தமிழகம்' என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 264 தொகுதிகளிலும் சுமார் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகக்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. கட்சி அலுவலக வளாகத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு விஜயகாந்த் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில் ராமாபுரம் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளிக்கு நன்கொடையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை விஜயகாந்த் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.