Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 14, 2016

​திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகம் - ப.சிதம்பரம்!



தமிழக உள்ளாட்சி தேர்தல் வரை திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பது சந்தேகம் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொண்டர்களின் கட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் வரை திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா  என்பது சந்தேகம் என்றார். மேலும் தமிழக சட்டசபையில் திட்டங்களை யார் கொண்டு வந்தார்கள் என்பதை தவிர வேறு எந்த  விவாதங்களும் நடைபெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் தமிழக அரசு அறிவித்த புதிய நிதி திட்டங்கள் மக்களை சென்றடைந்த பின்பு தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.