August 1, 2016
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! குடிபோதையில் பாலியல் வன்கொடுமை
ஒட்டன்சத்திரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குடிபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் குடிபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் முருகேசனை பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இருப்பினும் காவல்துறையினர் பல மணி நேரமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த முருகேசனை கைது செய்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! குடிபோதையில் பாலியல் வன்கொடுமை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.