Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

இளம் யுவதி கடத்தல் ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!



இளம் யுவதி கடத்தல் ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!
பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் வைத்து யுவதி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தி செல்லப்பட்டார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விரைந்து செயற்பட்டனர்.
இந்நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பட்ட நிலையில் அதிலிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், கடத்தப்பட்ட யுவதி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிராதான சந்தேகநபர் இந்த வாகனத்தில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடத்தப்பட்ட யுவதியையும் பிரதான சந்தேக நபரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.