Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 2, 2016

ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம்!



ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அம்மாநில எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்றும், இருப்பினும் ஆந்திர வளர்ச்சிக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதனையடுத்து ஆந்திராவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் உள்ளிட்டவை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னை கோயம்பேடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் வேலைநிறுத்தம்:
மேலும், வங்கிகளின் இணைப்பை கண்டித்து 4,000 வங்கிகளும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன, இதில் 70,000 வங்கி ஊழியர்கள் பங்குபெற்றுள்ளனர்.
இதன் காரணமாக வங்கிப் பரிவர்த்தனைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.