August 10, 2016
சவுதி மீன்பிடிக்கச் சென்ற தமிழர்கள் ஒரு வாரமாகியும் கரை திரும்பாததால் உறவினர்கள் கலக்கம்
சவுதி அரேபியா நாட்டில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கடந்த 7 நாட்களாக கரைக்கு திரும்பாததால் 3 தமிழக மீனவர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் கேசவன், செல்வம் மற்றும் நெல்லை மாவட்டத்தை சார்ந்த வியாகுலம் ஆகியோர், துபாய் நாட்டின் சார்ஜா பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆம் தேதி, சார்ஜாவை சேர்ந்த அரபி ஒருவருடன், தமிழக மீனவர்கள் நால்வரும், விசைபடகு ஒன்றில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அந்த குழுவினர், அன்று இரவே கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் 7 நாட்கள் கடந்த பிறகும், அவர்கள் கரை திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் மீனவர்களின் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்
சவுதி மீன்பிடிக்கச் சென்ற தமிழர்கள் ஒரு வாரமாகியும் கரை திரும்பாததால் உறவினர்கள் கலக்கம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.