August 22, 2016
பாரதீய ஜனதா தலைவர் மகனை உல்பா பயங்கரவாதிகள் கடத்தினர், அரசியல் நாடகமோ?
அசாம் மாநில பாரதீய ஜனதா தலைவர் மகனை உல்பா பயங்கரவாதிகள் கடத்திஉள்ளனர். அவரை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் பணய தொகை கேட்டுஉள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் இருந்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரத்னாஸ்வீர் மோரான்ஸ் மகன் குல்தீப்பை பயங்கரவாதிகள் கடத்திவிட்டனர். இப்போது வெளியிட்டு உள்ள வீடியோவில் குல்தீப்பை விடுதலை செய்ய உல்பா பயங்கரவாதிகள் ரூ 1 கோடி கேட்கிறார்கள். குல்தீப் மோரன் பச்சை நிற டி-சர்ட் அணிந்து உள்ளார். முழங்காலில் நிற்கும் அவரை சுற்றி துப்பாக்கியுடன் முகத்தை மூடிக்கொண்ட 5 பயங்கரவாதிகள் நிற்கிறார்கள். பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு இடையே குல்தீப் பேசும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
வீடியோவில் பேசும் குல்தீப் மோரன், “என்னுடைய உடல் நிலை மோசம் அடைந்துவிட்டது, என்னுடைய உடல்நலம் குன்றிவிட்டது.
இப்பகுதியில் உல்பா பயங்கரவாதிகள் கடத்தலில் ஈடுபடுதல் என்பது பொதுவான விஷயமாகும், ஆனால் வீடியோ வெளியிடுவது என்பது வழக்கத்திற்கு மாறானது. பெற்றோர் மற்றும் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வாலிபர் குல்தீப் மோரன் வீடியோவில் கூறிஉள்ளார். மாநிலத்தில் இவ்வருட ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பாரதீய ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது.
Thanks To: Daily Thanthi
பாரதீய ஜனதா தலைவர் மகனை உல்பா பயங்கரவாதிகள் கடத்தினர், அரசியல் நாடகமோ?
Reviewed by மறத்தமிழன்
on
August 22, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.