Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 7, 2016

பசு பாதுகாப்பு அமைப்பினர் தன்னை கோபத்தில் ஆழ்த்திவிட்டனர்: மவுனம் கலைத்த மோடி



சிறந்த நிர்வாகமே மாற்றத்திற்கான விதை என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகம் செழிக்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் ’மை கவ்’ இணையதளம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றினார். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கேள்விகளை மோடியிடம் கேட்டனர். சிறந்த அரசாங்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வெளிப்படையானதும், நம்பிக்கை மிக்கதாக இருப்பதே சிறந்த அரசாங்கம் என்று தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் பசுவதையில் ஈடுபட்டதாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பசு பாதுகாப்பு அமைப்பினர் தன்னை கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக கூறியுள்ளார். மாட்டை வைத்து அரசியல் செய்பவர்கள் சமூக விரோதிகள் என்று கூறிய அவர், தங்களின் தவறுகளை மறைப்பதற்காக மாட்டின் மீது அபிமானம் உள்ளவர்கள் போல காட்டிக் கொள்வதாக குறை கூறினார்.
உலகம் முழுவதும் சரிவு நிலை இருக்கும் போது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதத்தை தொட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் வளர்ச்சிக்கும், சிறந்த நிர்வாகத்திற்கும் இடையிலான தூரத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.