Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 25, 2016

மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள யுவராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல்!



கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் இருந்த யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், நாமக்கல் நீதிமன்ற நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் 8 மாதங்களாக இருந்த அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
யுவராஜின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 12ம் தேதி நிபந்தனை ஜாமீனுக்கு தடை விதித்தது.
அதனைத்தொடர்ந்து, சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக பெரியமேடு பகுதியில் தங்கியிருந்த யுவராஜை நாமக்கல் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நாமக்கல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் யுவராஜை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். எனினும், நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், குழப்பம் நீடிக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.